ப்ளாகரில் வாசகர் பக்கம் மற்றும் தொடர்புக்கொள்க பக்கத்தை இணைப்பது எப்படி?

How to add forms and guest book in blogger?

கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை காரணம் பள்ளி விடுமுறை முடிந்து எனக்கு பள்ளி ஆரம்பித்து விட்டது. அதுவும் பதினோராம் வகுப்பு அப்படியே பத்தாம் வகுப்புக்கு எதிர்மறையாக இருக்கிறது. ஒவ்வொரு பாடமும் இரண்டு புத்தகமாக இருக்கிறது. காலையில் பள்ளிக்கு சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது அதனால் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வரை எழுதலாம் என்று இருக்கிறேன். சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்!அனைத்து பதிவர்களுக்கும் தங்களது வாசகர்களிடம் இருந்து நல்ல கருத்துக்களைக் கேட்க ஆசைதான். அவ்வாறு வாசகர்கள் கருத்துரை இட ஒரு வாசகர் பக்கம் அல்லது உங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு பக்கம் என்று வலைப்பூவில் நிறுவினால் வாசகர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். எனவே அந்த வாசகர் பக்கம் மற்றும் உங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு பக்கத்தை எப்படி இணைப்பது என்று பாப்போம் (இது மிகவும் சுலபமானது கவலைப்படாதீர்:)


முதலில் கீழே உள்ள தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்குங்கள்.
பிறகு உங்கள் கணக்கின் முகப்பு பகுதியில் WEB TOOLS என்ற இடத்தில் Forms,Guset book,Forums என்று பட்டியலிடப் பட்டிருக்கும். இதோ கீழே உள்ள படத்தை பாருங்கள்.




இது மூன்றுமே இலவசம் தான் கவலைப்படாதீர்.இதில் எது உங்களுக்கு வேண்டுமோ அதனை சொடுக்கி பிறகு அதனை உங்களது வலைப்பூவிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். மாற்றிய பிறகு அந்த தளம் தரும் குறியீடுகளை சேகரித்து BLOGGER ---> NEW POST சென்று ஒட்டவும்.அவ்வளவுதான் வேலை முடிந்தது. இந்த தளம் இது போன்ற நிறைய தேவையான கருவிகளை தருகிறது அதனையும் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.

13 கருத்துரைகள்:

மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக இருக்கிறது.
பயனுள்ள தகவல்கள்.
வாழ்த்துக்கள். இம்ரான்

A small typo there in "How to add forms and guset book in blogger?" It's guest and not guset?

நல்ல தகவல் இம்ரான்...
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

//abul bazar
மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக இருக்கிறது.
பயனுள்ள தகவல்கள்.
வாழ்த்துக்கள். இம்ரான்//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அப்துல் பசர்.

//Raam
A small typo there in "How to add forms and guset book in blogger?" It's guest and not guset?//

பிழையை அறிந்து அதனை என்னிடம் கூறியதற்கு மிக்க நன்றி ராம்!

//பட்டாபட்டி..
நல்ல தகவல் பாஸ்...//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி பட்டாப்பட்டி!

@வேலன்.

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி வேலன்!

நல்லா தகவல்.... சின்ன பையா

@rk guru
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

தங்கள் வலைப்பதிவில் உள்ள பேஸ்புக்பேஜ் வலைப்பதிவில் கொண்டுவருவது எப்படியென்று ஒரு இடுகை எழுதுங்களென்.

@முனைவர்.இரா.குணசீலன்

அதனை அறிய இந்த பதிவினை படிக்கவும் http://cp-in.blogspot.com/2010/04/twitter-facebook-widget.html. மேலும் உங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...